நாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் 356 நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் சுதா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால், உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்திய அரசியலமைப்பு பிரிவு 217 மற்றும் 224 என கீழ் வகுக்கப்பட்ட நடைமுறைகளின் படி தேர்வு செய்யப்படுவதாகக் கூறினார்.
நாடு முழுவதும் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் மொத்தம் ஆயிரத்து 122 பணியிடங்கள் இருக்கும் சூழலில், 766 நீதிபதிகள் பணியாற்றி வருவதாகவும், 356 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் விளக்கினார். சென்னை உயர் நீதிமன்றத்தை பொறுத்தவரையில் 75 நீதிபதிகள் பணியிடங்களில் 65 பேர் பணியில் இருப்பதாகவும், 3 நீதிபதிகளுக்கான பரிந்துரைகள் தற்போது செயல்முறையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.