இந்தியா

''இன்னும் சிங்கிள், வேலையிலும் பற்றில்லை'' - கருணைக்கொலைக்கு அனுமதி கோரிய நபர்

''இன்னும் சிங்கிள், வேலையிலும் பற்றில்லை'' - கருணைக்கொலைக்கு அனுமதி கோரிய நபர்

webteam

செய்யும் வேலையிலும் விருப்பமில்லை, திருமண வாழ்க்கையும் கைகூடவில்லை எனக்கூறி எனவே தன்னை கருணைக்கொலை செய்யக்கோரி 35 வயதான ஒருவர் முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.

புனேவைச் சேர்ந்த 35 வயதான நபர் ஒருவர் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஷுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தான் செய்யும் வேலையிலும் தனக்கு விருப்பமில்லை என்றும் திருமணவாழ்க்கையும் கைகூடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது பெற்றோர்களுக்கு தான் எதையுமே செய்யவில்லை. தன்னை கருணைக்கொலை செய்ய அனுமதியுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த காவல் உயர் அதிகாரி தேவிதாஸ், ''கடிதத்தில் அவர் தந்தைக்கு 83 வயது தாய்க்கு 70 வயது என குறிப்பிட்டுள்ளார். பெற்றோருக்கு தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என மன உளைச்சலில் இருக்கிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் கூட அவருக்கு மன அழுத்தமாக இருக்கிறது.

அவர் நன்கு படித்தவர். பெற்றோர் மீது அதிக அன்பு வைத்துள்ளார். கைகூடாத திருமண வாழ்க்கையால் விரக்தியடைந்துள்ளார். நாங்கள் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளோம் '' என தெரிவித்துள்ளார்.