இந்தியா

அதிகரிக்கும் காற்று மாசு - டெல்லியில் நாளை முதல் வாகனக் கட்டுப்பாடு அமல்

webteam

காற்று மாசு அதிகரித்தும் வரும் நிலையில், நாளை முதல் வாகனக் கட்டுப்பாடு டெல்லியில் அமலுக்கு வருவதாக தெரிய வந்துள்ளது. 

டெல்லியில் லேசான மழை பெய்துள்ளதால் காற்று மாசு சற்று குறைந்து காணப்பட்டது. எனினும் மோசமான நிலையே இன்னும் நீடிப்பதாக மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்திருந்தது. காலை ஏழு மணியளவில் டெல்லியில் காற்று தரக் குறியீடு எண் 466 ஆக பதிவானதாக வாரியம் தெரிவித்தது. டெல்லியில் இருந்து புறநகர் செல்லும் பகுதிகளில் கடுமையான மாசு அளவு பதிவாகியிருந்த நிலையில் சற்று குறைந்து மிக மோசமான மாசு என பதிவானது. 

இந்நிலையில், இன்று மாலை நிலவரப்படி டெல்லி நகரத்தில் மக்கள் சுவாசிக்க தகுதியற்ற நிலையில் காற்றில் கடுமையாக மாசு கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மிகவும் கடுமையான மாசு அளவான 500 AQI - ஆனது தற்போது 900 என்ற குறியீட்டில் காற்றின் தரம் உள்ளது. 

காற்று மாசு அதிகரிப்பு காரணமாக டெல்லியில் நாளை முதல் வாகனக் கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. இந்தக் கட்டுப்பாட்டினால் நாளை முதல் பொதுமக்களின் இயல்புநிலை பாதிக்கப்படும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.