புனே எக்ஸ் தளம்
இந்தியா

புனே | ’என்ன க்யூ போயிட்டே இருக்கு..!’ வேலைக்காக வரிசையில் நின்ற இளைஞர்கள்.. வைரல் வீடியோ!

மகாராஷ்டிராவின் புனேவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலைக்காக, 3,000க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் வரிசையில் நிற்பதைக் காண முடிகிறது.

Prakash J

கொரோனா பொது முடக்கத்திற்குப் பின் உலகம் முழுவதும் பணி நீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. முன்னணி நிறுவனங்கள் பல்வேறு காரணங்களை காட்டி ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. இதில் முக்கியமாக ரோபா மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் பேசப்படுகிறது. இது, இந்தியாவிலும் தொடர்கிறது. நாடு முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.

படித்த இளைஞர்களுக்கு தகுதிக்கு உண்டான வேலைகள் கிடைக்காததால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அதேநேரத்தில், குறைந்த பணியிடங்கள் குறித்து அறிவிப்புகளை வெளியிடும் நிறுவனங்களில்கூட, லட்சக்கணக்கானவர்கள் கூடியிருப்பதைக் காண முடிகிறது.

அபொடியொரு சம்பவம்தான் மகாராஷ்டிராவின் புனேவில் அரங்கேறியுள்ளது. சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில், தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலைக்காக, வெளியே 3,000க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் வரிசையில் நிற்பதைக் காண முடிகிறது. வெறும், 100 காலி பணியிடங்களுக்காக கிட்டத்தட்ட 3000 இளைஞர்கள் இந்த நேர்காணலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, இந்தியாவில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதில்லை என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இந்த வீடியோ அந்த வேதனையை உலகுக்கு உணர்த்துவதாக அமைந்துள்ளது.