இந்தியா

இந்தியாவில் கொரோனா தொற்று 30 ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்று 30 ஆக அதிகரிப்பு

jagadeesh

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மாநிலங்களவையில் அறிக்கை வெளியிட்டார். உலக சுகாதார அமைப்பு அறிவுரை வழங்குவதற்கு முன்னதாகவே அதாவது ஜனவரி 17ஆம் தேதி முதலே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்ததாக தெரிவித்தார்.

மார்ச் 4ஆம் தேதி வரை இந்தியாவில் 29 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த ஹர்ஷ்வர்தன், அமைச்சர்கள் குழு ஒன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாக கூறினார். நாடு முழுவதும் 28 ஆயிரத்து 529 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

முன்னதாக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து பேசிய காங்கிரஸ் எம்பி குலாம் நபி ஆசாத், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.