துப்பாக்கி குண்டு முகநூல்
இந்தியா

துப்பாக்கி குண்டு பாய்ந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு!

இந்நிலையில் இவர்களின் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த உண்மையான துப்பாக்கியை கையில் எடுத்து சுற்றி வந்துள்ளனர்.

PT WEB

கர்நாடகாவில், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மண்டியா மாவட்டம் நாகமங்கல் தாலுகாவில், கோழிப்பண்ணையில் பணிபுரிந்துவரும் மேற்கு வங்கத்தை சேர்ந்த தம்பதியினர், அதே பண்ணையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த உண்மையான துப்பாக்கியை கையில் எடுத்து சுற்றி வந்துள்ளனர்.

விளையாட்டுத் துப்பாக்கி என தவறாக நினைத்து சுட்டுக்கொண்டதில், 3 வயது குழந்தையின் வயிற்றில் குண்டு பாய்ந்துள்ளது. இதில் படுகாயமடைந்த அக்குழந்தை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.