மாநிலங்களவை அலுவல் செயல்பாடுகளில் இந்தி மொழியின் பயன்பாடு மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநிலங்களவை செயலகம் சார்பில் அலுவல் பணிகள் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டில் மாநிலங்களவையில் பெறப்பட்ட விண்ணப்பங்கள், கோரிக்கைகள் ஆகியவை இந்தி மொழியில் வருவது மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதே போல் தகவல் பரிமாற்றமும் இந்தி மொழியிலேயே பேசப்படுவது இரு மடங்காக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவல் மொழியாக இந்தி இருப்பதால் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதே இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.