புலி புதியதலைமுறை
இந்தியா

வயநாடு மாவட்டத்தில் ஒரே நாளில் 3 புலிகள் அடுத்தடுத்து மரணம்; காரணம் என்ன?

வயநாடு மாவட்டத்தில் சமீப காலமாக மனிதர்கள் மற்றும் புலிகள் இடையிலான மோதல்கள் அதிகரித்து காணப்படுகின்றன. குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து புலிகள் தாக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகின்றன.

PT WEB

கேரளாவில் ஒரே நாளில் மூன்று புலிகள் உயிரிழந்த சம்பவம்

கேரள மாநிலம் வயநாட்டில், ஒரே நாளில் மூன்று புலிகள் உயிரிழந்துள்ளன. வயநாடு மாவட்டத்தில் சமீப காலமாக
மனிதர்கள் மற்றும் புலிகள் இடையிலான மோதல்கள் அதிகரித்து
காணப்படுகின்றன.

குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து புலிகள் தாக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகின்றன. இந்நிலையில் ஒரே நாளில் வைத்திரி பகுதியில் உள்ள தனியார்
காப்பி தோட்டத்தில் ஒரு புலியும், குறிச்சியடு வனப்பகுதிக்குள் ஒரு புலியும் ஒரு புலிக்குட்டியும் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

புலிகள் உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிய மாநில வனத்துறை அமைச்சர் சுசீந்திரன் உத்தரவிட்டுள்ளார். புலிகள் இயற்கையாக இறந்ததா அல்லது யாரேனும் புலியை கொன்றார்களா என்ற கோணத்தில் விசாரணை செய்ய, முதன்மை வன உயிரின பாதுகாவலர் தீபா தலைமையிலான 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.