இந்தியா

துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளை - கொள்ளையர்களுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளை - கொள்ளையர்களுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

webteam

மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில், நகை கடையில் துப்பாக்கிச்சூடு நடத்தி நகைகளை திருடிய மூவரை பொதுமக்கள் தைரியமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மேற்கு வங்கத்தில் ஹெல்மெட் அணிந்தபடி துப்பாக்கியுடன் நகை கடையில் நுழைந்த மூவர், கடையினுள் துப்பாக்கிச்சூடு நடத்தி அங்கிருந்த நகைகளை திருடினர். அப்போது, இதை பார்த்த பொதுமக்கள் அவர்கள் 3 பேரையும் தைரியமாக விரட்டி பிடித்து, மூவருக்கும் தர்ம அடி கொடுத்தனர். பின்னர் கொள்ளையர்கள் 3 பேரையும் பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 3 பேரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.