இந்தியா

எஸ்சி, எஸ்டி மறுசீராய்வு மனுவை 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் 

webteam

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தின் மறுசீராய்வு மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் எஸ்சி,எஸ்டி சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை அளித்தது. இந்தத் தீர்ப்பில் இச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டால், உடனடியாக கைது செய்ய முடியாது. அத்துடன் இந்த வழக்கிற்கு முன் ஜாமீன் வழங்கலாம் என்றும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

இந்தத் தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு வந்தது. இந்தத் தீர்ப்பு எஸ்சி, எஸ்டி சட்டத்தை வலுவிழக்க செய்யும் வகையில் உள்ளது எனப் பலர் குற்றம் சாட்டி வந்தனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்தனர். இந்நிலையில் இந்த மறுசீராய்வு மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.