குஜராத்தில் ஒரே ஏடிஎம்மில் பணம் எடுத்த மூன்று ராணுவ வீரர்களுக்கு கொரோனா பரவியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
குஜராத்தின் பரோடாவில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் கடந்த வியாழக்கிழமை ராணுவ வீரர்கள் மூவர் பணம் எடுத்துள்ளனர். இதனையடுத்து இவர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து இவர்களுக்கு எப்படி கொரோனா ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் இவர்கள் மூவரும் பரோடாவில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தது தெரிய வந்தது. இந்நிலையில் இவர்களுடன் தொடர்பில் இருந்து 28 நபர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது மட்டுமல்லாமல் மற்றொரு ராணுவ வீரரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் குப்வரா ராணுவ படையில் செவிலியர்களின் உதவியளாராக பணியாற்றி வருகிறார். இதனையடுத்து அவர் தற்போது டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் இது வரை 21,750 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 686 இறந்துள்ளனர்.