அந்தமான் நிகோபாரில் இருக்கும் மூன்று தீவுகளுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உட்பட சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் சூட்டப்படுகின்றன.
அந்தமான் நிகோபாரில் மொத்தம் 572 தீவுகள் உள்ளன. அதில் மக்கள் குடியிருக்கும் தீவுகளின் எண்ணிக்கை 36. இதில் மூன்று தீவுகளுக்கு சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களைச் சூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அந்தமான் தலைநகர் போர்ட் ப்ளேரில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தேசியக்கொடி ஏற்றியதன் 75 ஆவது ஆண்டை நினைவுபடுத்தும் வகையில் ரோஸ் தீவுக்கு சுபாஷ் சந்திரபோசின் பெயர் சூட்டப்படுகிறது.
நீல் தீவுக்கு ஷாஹித் என்றும், ஹேவ்லாக் தீவுக்கு ஸ்வராஜ் என்றும் பெயர் சூட்டப்படுகின்றன. வரும் 30ஆம் தேதி போர்ட் ப்ளேர் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு தேசியக் கொடியேற்றி, முறைப்படி பெயர் மாற்றத்தை அறிவிக்க இருக்கிறார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் செல்கிறார்.
(நீல் தீவு)
பெயர் மாற்றத்துக்கான பூர்வாங்க பணிகள் நிறைவடைந்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.