இந்தியா

2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

Sinekadhara

2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள்மீதான விசாரணை பிப்ரவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ரம் முறைகேடு வழக்கிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுக்கள் மீதான விசாரணை நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தது.

இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்கக்கோரி சி.பி.ஐ, அமலாக்கத் துறை சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்றார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி முதல் தினந்தோறும் 2ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி நவம்பர் 30-ஆம் தேதியுடன் ஓய்வு பெற்ற நிலையில், 2ஜி வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எனவே கடந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதிக்குள் இந்த வழக்கு விசாரணை முடிவைடைந்து தீர்ப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், அந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 2ஜி வ மேல்முறையீட்டு மனுக்கள்மீதான விசாரணை பிப்ரவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிபிஐ நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிபிஐ, அமலாக்கத்துறை தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.