இந்தியா

2ஜி மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரிய மனுக்கள்: இன்று தீர்ப்பு..!

jagadeesh

2ஜி மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க கோரிய சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தொடர்ந்த மனுக்கள் மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

இந்திய அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஆ.ராசா, கனிமொழி, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்டோரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017ஆம் ஆண்டு விடுவித்திருந்தது. இதை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐயும் அமலாக்கத்துறையும் கடந்தாண்டு மேல்முறையீடு செய்திருந்தன.

இந்நிலையில் இ‌ந்த மேல்முறையீட்டு மனு மீது விரைந்து விசாரணை நடத்தி முடிக்கவேண்டும் என இரு அமைப்புகளும் மனு தொடர்ந்திருந்தன. இம்மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. முன்னதாக இவ்வழக்கு விசாரணையை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்ற சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வாதத்திற்கு எதிர்மனுதாரர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.