இந்தியா

2ஜி வழக்கில் ஜூலை 15-ல் தீர்ப்பு?

2ஜி வழக்கில் ஜூலை 15-ல் தீர்ப்பு?

Rasus

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இறுதி வாதம் நிறைவடைந்துள்ள நிலையில் ஜூலை மாதம் 15-ஆம் தேதி தீர்ப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகள், டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரின் இறுதி வாதங்களும் நிறைவு பெற்றுள்ளன. சிபிஐ தனது எதிர் வாதங்களை வரும் வெள்ளிக்கிழமை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யலாம் என நீதிபதி கூறியுள்ளார். அதே போல குற்றம்‌சாட்டப்பட்டவர்களிடம் வரும் ஜூலை மாதம் விளக்கம் கேட்பேன் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். இதனிடையே இந்த வழக்கில் ஜூலை மாதம் 15-ஆம் தேதி தீர்ப்பு வெளி‌யாகும் என கூறப்படுகிறது.