இந்தியா

மாஞ்சா கயிறு அறுத்து உயிரிழந்த பொறியியல் பட்டதாரி 

மாஞ்சா கயிறு அறுத்து உயிரிழந்த பொறியியல் பட்டதாரி 

webteam

பட்டத்தின் மாஞ்சா கயிறு கழுத்தை அறுத்ததில் டெல்லியில் 28 வயது பொறியியல் பட்டதாரி உயிரிழந்தார். 

டெல்லியை சேர்ந்தவர் மாணவ் ஷர்மா (28). இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. இவரும் இவரது தங்கையும் ராக்‌ஷா பந்தன் பண்டிகையை கொண்டாட டெல்லியின் ரோகினி பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் மீது பட்டத்தின் மாஞ்சா கயிறு உரசியதாக கூறப்படுகிறது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய மாணவ் ஷர்மாவின் கழுத்தின் மீது மாஞ்சா கயிறு அறுத்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக காவல்துறையின் ஏடிஜிபி ராஜேந்தர் சிங் சாகர், “மாணவ் ஷர்மா மற்றும் அவரது சகோதரிகள் ரக்‌ஷா பந்தன் பண்டிகையை கொண்டாட டெல்லியின் ரோகினி பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு பாலத்தின் மேல் சென்ற போது அவர்களை பட்டத்தின் மாஞ்சா கயிறு ஒன்று தாக்கியது. இதில் மாணவ் ஷர்மாவின் கழுத்து அறுப்பட்டது. இதனையடுத்து அவரது கழுத்திலிருந்து இரத்தம் வெளியேறியது. உடனே அவரைச் சகோதரிகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரது உயிர்ப் பிரிந்தது.  

இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம். ஷர்மாவின் உடலை பிரதே பரிசோதனை செய்த மருத்துவர்கள் பட்டம் கழுத்தை அறுத்ததே மரணத்திற்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர். ஏனென்றால் அந்த மாஞ்சா கயிறு கழுத்தின் உள் பகுதிக்குள் ஆழமாக வெட்டி இருப்பதால் உணவு மற்றும் சுவாச குழாய்யின் தொடர்பு துண்டிக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்” எனத் தெரிவித்தார்.