சாலையின் நடுவே நின்ற மாட்டை அப்புறப்படுத்த முயன்ற வாகன ஓட்டியை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்மேற்கு டெல்லியில் உள்ள கிதோர்னி சாலையின் நடுவே பசு மாடு ஒன்று நள்ளிரவு நேரத்தில் நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அவ்வழியாக காரில் வந்த இளைஞர் ஒருவர் பசு மாடு இடைஞ்சலாக நின்று கொண்டிருந்ததை கண்டு, காரிலிருந்து இறங்கிவந்து அப்புறப்படுத்த முயன்றார்.
இதைக்கண்ட அங்கிருந்த இருவர், பசு மாட்டை அப்புறப்படுத்துவதை தாக்குவதாக நினைத்து அந்த வாகன ஓட்டியை கம்பால் தாக்கியுள்ளனர். மேலும் அதில் ஒருவர் ஏர்கன்னால் சுட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்துவந்து தாக்கிய இருவரையும் பிடித்து விசாரித்ததில் அவர்கள் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து தாக்கிய இருவர் மீதும் கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.