இந்தியா

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 5 லட்சம் - முதல்வர் குமாரசாமி

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 5 லட்சம் - முதல்வர் குமாரசாமி

webteam

கர்நாடகாவிலுள்ள கால்வாயில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்க முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். 

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்திலுள்ள பாண்டவபுரம் கனகனமாரடியில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கால்வாயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. 

இதில் பேருந்தில் பயணம் செய்து பலரில் 28 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சிலர் படுகாயமடந்தனர். 

தகவல் அறிந்து வந்த அக்கம் பக்கத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பள்ளி மாணவ மாணவிகள் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் குமாரசாமி தமது அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்க முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.