இந்தியாவில் 27 சதவிகித குழந்தைகள் 18 வயது நிரம்புவதற்கு முன்பே திருமணம் ஆனவர்கள் என்று ஐக்கிய நாடுகளின் அவையான யு.என்.எஃப்.பி.ஏ (United Nations Fund for Population Activities) கூறியுள்ளது. மேலும், குழந்தை பிறப்பின்போது பெண்கள் மரணம் அடைவதை தடுப்பதில் இந்தியா பின்தங்கியே இருப்பதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.எஃப்.பி.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, குழந்தை திருமணங்களை கட்டுப்படுத்துவதிலும், குழந்தை பிறப்பின்போது பெண்கள் மரணம் அடைவதை தடுப்பதிலும் இந்தியா பின்தங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் 1 லட்சம் பேருக்கு 174 தாய்மார்கள் குழந்தைப் பிறப்பின்போது மரணம் அடைகின்றனர். 27 சதவிகித பேர் 18 வயதுக்குள் திருமணம் செய்து கொள்கின்றனர். இது பங்களாதேஷில் 59 சதவிகிதமாகவும், நேபாளத்தில் 37 சதவிகிதமாகவும் உள்ளது. மேலும் இந்த அறிக்கையில், வசதியானவர்களுக்கும், வறுமையில் வாழ்பவர்களுக்கும் இடையேயான இடைவெளி மிகவும் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக, பல நூறு மில்லியன் மக்கள் ஒரு நாளுக்கு ரூ.78-க்கும் குறைவான வருமானத்தில் வாழ்ந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.