இந்தியா

இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 250 பேர் பலி

இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 250 பேர் பலி

Rasus

இந்தாண்டு மட்டும் நாடு முழுவதும் 250 பேர் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

மக்களை அதிகம் அச்சுறுத்தும் பன்றிக் காய்ச்சலுக்கு இந்தாண்டு இதுவரை 250 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகப்பட்சமாக 2706 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 96 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக குஜராத் மாநிலத்தில் 1187 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத் துறை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

பன்றிக் காய்ச்சல் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் வேளையில் மத்திய சுகாதாரத்தறை மாநில அரசுகளை போதிய முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. அதாவது காய்ச்சலை ஆரம்பத்திலேயே கண்டறியும் வசதி, மருத்துவமனையில் தேவையான படுக்கை வசதிகளை ஏற்படுத்தி வைக்குமாறும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக பன்றிக் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பன்றிக் காய்ச்சல் நோய் ‘‘எச்1 என்1’’ என்ற வைரஸ் கிருமியால் பரவுகிறது. இந்தக் காய்ச்சல் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் எளிதில் பரவும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.