இந்தியா

25% பணியாளர்கள் விதிகளின்படி தேர்வாகவில்லை: ரயில்வே பணியாளர் அமைப்பு தகவல்

25% பணியாளர்கள் விதிகளின்படி தேர்வாகவில்லை: ரயில்வே பணியாளர் அமைப்பு தகவல்

Rasus

இந்திய ரயில்வேயில் பணியாற்றுவோரில் நான்கில் ஒருவர் விதிமுறைகளின் கீழ் தேர்வு செய்யப்படவில்லை என்று ரயில்வே பணியாளர் நிர்வாக அமைப்பின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இந்த அமைப்பிடம் மொத்தமாக 89,000 ரயில்வே பணியாளர்கள் குறித்த தகவல்கள் உள்ளன. இவர்களில் 75 சதவிகிதம் பேர் ரயில்வே பணியாளர் தேர்வு விதிமுறைகளின் கீழ் தேர்வானவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள 25 சதவிகிதம் பேர் விதிமுறைகளின் கீழ் தேர்வு செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ரயில்வே வாரியத்துக்கு பணியாளர் நிர்வாக அமைப்பு அனுப்பியுள்ள கடிதத்தில், விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி பணியாளர் தேர்வு நடைபெறுவதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.