இந்தியா

பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் - தேர்வு எழுந்த வந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்!

பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் - தேர்வு எழுந்த வந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்!

webteam

தேர்வு எழுத வந்த பெண்ணை அவரது உறவினர் ஒருவரே ஹோட்டலில் தங்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்த கொடுமை அரங்கேறியுள்ளது. 

24 வயது நிரம்பிய இளம் பெண் ஒருவர் தனது சொந்த ஊரான மஹேந்ரகார்க் என்னும் இடத்தில் இருந்து மேற்படிப்புக்கான தேர்வு எழுத வந்துள்ளார். அப்போது அவரை தேர்வு எழுதும் மையத்தில் சந்தித்த அவரது தூரத்து உறவினர் ஒருவர், அருகில் உள்ள ஹோட்டலில் தங்கி பேசிவிட்டு பிறகு ஊருக்குச் செல்லலாம் என கூறி உள்ளார். ஆனால் அதற்கு அந்தப் பெண் சம்மதிக்காத நிலையில் அந்த இளைஞர் வற்புறுத்தி கேட்கவே உடன் அந்தப் பெண்ணும் அவருடன் ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். இருவரும் இணைந்து ஒரே அறையில் தங்கி இருந்ததாகவும் அன்று இரவு அப்பெண்ணை அந்த இளைஞர் பாலியல் வன்முறை செய்ததாகவும் போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலியல் வன்முறை சம்பவம் கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி நடந்ததாகவும் ஆனால் அது சம்பந்தமான புகார் நேற்று ஞாயிற்றுக் கிழமைதான் தங்களுக்கு கிடைத்திருப்பதாகவும் குருகிராம் போலீசார் கூறியுள்ளனர். 

இது குறித்து, “முதல் புகார் பதிவு கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. அந்தப் புகார் பிறகு குருகிராம் பகுதியில் உள்ள மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. புகார் குறித்த விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளோம்” என்று குருகிராம் போலீஸ் மக்கள் தொடர்பு அதிகாரி சுபாஷ் போகன் கூறியுள்ளார்.

“தனது மேற்படிப்புகான தேர்வை மேற்கொள்ள குருகிராம் நகருக்கு சென்றிருந்தபோது அங்கு உள்ள தேர்வு மையத்திற்கு வந்த தூரத்து உறவினர் பையன் ஒருவன் தன்னை வற்புறுத்தி ஹோட்டலுக்கு அழைத்து சென்று தங்க வைத்து, இரவில் உறங்கிக் கொண்டிருந்த போது அவரிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாம் கூறியுள்ளார். இந்த ஹோட்டல் குருகிராம் பேருந்து நிலையம் அருகில் உள்ளது.” என்று போலீசார் கூறியுள்ளனர்.

மேலும் பாலியல் வன்கொடுமை செய்தவரை தேடி வருகிறோம், அவரை விரைவில் கைது செய்வோம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.