கர்நாடகாவில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பட்டியலினத்தவர்களுக்கு 24 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
இதற்கான உத்தரவை மாநில சமூக நலத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி அரசு வழக்கறிஞர்களை நியமிக்கும் போது 17% பட்டியலினத்தவர்களுக்கும் 7% பழங்குடிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அரசுப்பணிகளில் பட்டியலினத்தவருக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அரசு முடிவு செய்திருந்ததும் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு நபர் ஆணையத்தையும் அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.