இந்தியா

"அரசியல் மோதல்களால் 3 ஆண்டில் 230 பேர் கொலை" - நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல்

PT WEB

நாட்டில் அரசியல் ரீதியான காரணங்களால் கடந்த 3 ஆண்டுகளில் 230 பேர் கொல்லப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய், ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிகபட்சமாக 49 பேர் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

மேற்கு வங்காளத்தில் 27 பேரும், பீகாரில் 26 பேரும் அரசியல் தொடர்பான மோதல்களால் இறந்திருப்பதாக அமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்தார். 2017-ல் 99 பேரும், 2018-ல் 59 பேரும், 2019-ல் 72 பேரும், அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.