bihar election 2025 web
இந்தியா

27, 500, 1000 வாக்குகள் வித்தியாசத்தில் கைமாறிய வெற்றி.. இறுதி சுற்றில் மாறிய 18 தொகுதிகள் முடிவு!

2025 பிஹார் சட்டமன்ற தேர்தலில் 18 தொகுதிகளில் 500-1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கைமாறின.. அதன்மூலம் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை பிஹார் தேர்தல் எடுத்துக்காட்டியுள்ளது..

Rishan Vengai

பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. மகாகத்பந்தன் 31 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 243 தொகுதிகளில் 11 தொகுதிகளில் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி, 7 தொகுதிகளில் 500க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி.

243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11-ஆம் தேதிகளில் இரண்டுகட்டமாக நடைபெற்றது.. ஆட்சியை பிடிக்க 122 தொகுதிகளில் வென்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி, பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி என மும்முனைப் போட்டி நிலவியது..

யார் ஆட்சியை பிடிக்கப்போகிறார்கள் என்ற அதிகப்படியான எதிர்ப்பார்ப்பில் நவம்பர் 14-ம் தேதியான நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது..

பிஹாரில் ஆட்சி அமைக்கும் NDA கூட்டணி

ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்ற எதிர்ப்பார்ப்புக்கு இடையில் அத்தனை கணிப்புகளையும் மீறி பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துள்ளது.. எதிரணியில் நின்ற மகாகத்பந்தன் கூட்டணி 31 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று படுதோல்வியை சந்தித்தது..

500 வாக்குகள் வித்தியாசத்தில் மாறிய வெற்றி..

ஒவ்வொரு வாக்கும் எவ்வளவு முக்கியம் என்பதற்கு பிஹார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டாக மாறியிருக்கிறது.

243 தொகுதிகள் கொண்ட பிஹார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அதில் 11 தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பலரும் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தட்டி பறித்துள்ளனர். அதேசமயம் 500க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் 7 தொகுதிகளில் வெற்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிலும் சந்தேஷ் தொகுதியில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் ராதா சரண் வெறும் 27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தட்டிப்பறித்தார்.. இந்த வெற்றிகளில் பெரும்பாலும் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.