இந்தியா

2023-24 இந்திய பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும்? நிதியமைச்சர் சமர்ப்பித்த ஆய்வில் தகவல்

webteam

2023-24ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6-6.8% ஆக இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

நடப்பாண்டுக்கான நாடாளுமன்ற முதல் பட்ஜெட் கூட்டத்தொடர், அதன் மைய மண்டபத்தில் இன்று (ஜனவரி 31) தொடங்கியது. இதையடுத்து, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரை ஆற்றினார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25-ந் தேதி ஜனாதிபதி பதவி ஏற்று கொண்ட பின்னர், நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு உரை ஆற்றுவது இதுவே முதல் முறை ஆகும். தொடர்ந்து, 2022-23 முழு நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஆய்வு அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் குறித்து இங்கு பார்ப்போம்:

`இந்தியாவில் 141.4 லட்சம் கோடி செலவில் 89,151 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ரூ. 5.5 லட்சம் கோடி மதிப்பிலான 1009 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் டெக் நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வருகிறது. உலக அளவில் லே ஆப் தொடங்கி உள்ளது. இதனால் உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதற்கான ரிஸ்க் அதிகரித்துள்ளது.

2023-24ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6-6.8% ஆக இருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 வருடங்களாக மருத்துவ துறைக்கான ஒதுக்கீடு, பட்ஜெட்டில் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. மாநில - மத்திய பட்ஜெட்டில் 2023 நிதி ஆண்டில் மருத்துவத்துறைக்காக 2.1% ஒதுக்கப்பட்டது.

கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவின் விவசாயத் துறை சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதமான 4.6 டாலர்களுடன் வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

கொரோனா காலத்தில் நெருக்கடி மேலாண்மையில் சுய உதவிக் குழுக்களால் முகக்கவசங்கள் தயாரிப்பது குறிப்பிடத்தக்க பங்களிப்பாக இருந்தது. 2023 ஜனவரி மாதம் 4ஆம் தேதி நிலவரப்படி, 16.9 கோடிக்கும் அதிகமான முகக்கவசங்கள் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்பட்டன.

நாட்டின் மக்கள்தொகையில் 65 சதவீத மக்கள் (2021 தரவு) கிராமப்புறங்களில் வசிப்பதாகவும், 47 சதவீத மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரத்திற்காக நம்பியிருப்பதாகவும் பொருளாதார ஆய்வு 2023 குறிப்பிடுகிறது.

உலகளாவிய பொருட்களின் விலைகள் உயர்ந்து கொண்டே இருப்பதால் சிஏடி தொடர்ந்து விரிவடையும் என்று சர்வே கூறுகிறது. மேலும் விரிவடைந்தால், அது ரூபாயின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.

சிறு குறு தொழிலாளர்கள் கடன் பெறுவதற்கு வசதியாக, அவசர கால கடனளிப்பு உத்தரவாதத் திட்டம் (ECLGS) எளிமைப்படுத்தியுள்ளது.
2023ல் ஜிடிபி உயர அதிக மூலதனச் செலவு முக்கிய காரணமாக இருக்கும்.

ஆற்றல் மற்றும் எரிசக்தி துறையில் ஏற்படும் மாற்றங்கள் இந்தியாவை அடுத்த 25 ஆண்டுகளுக்கு வழிநடத்தும்.

நாடு இப்போது ஸ்டீல் உற்பத்தியில் உலகளாவிய சக்தியாக திகழ்கிறது. உலகின் 2வது பெரிய ஸ்டீல் உற்பத்தியாளராகவும் உள்ளது’