2020 என்பது வேறு எந்த வருடமும் போல இல்லாத ஆண்டாகும். இதயத்தை உடைக்கும் இழப்புகள் முதல் தைரியத்தின் கதைகள் வரை உலகம் அனைத்தையும் இந்த ஆண்டில் பார்த்தது. ஆச்சரியப்படத்தக்க வகையில் # COVID-19 இந்த ஆண்டு பெரும்பாலான மக்கள் பயன்படுத்திய ஹேஷ்டேக் ஆகும், அதைத் தொடர்ந்து #BlackLivesMatter உலகத்தை அணிதிரட்டியது
உலக அளவில் வைரலான டாப் ட்வீட்கள்
ஹாலிவுட் நடிகர் சாட்விக் போஸ்மேனின் ட்விட்டர் கணக்கில் இறுதி ட்வீட், அவரது மரணத்தை அறிவித்தது, இந்த ஆண்டின் மிகவும் மறு ட்வீட் செய்யப்பட்ட மற்றும் மிகவும் விரும்பப்பட்ட ட்வீட் இது.
போஸ்மேனின் குடும்பத்தினரின் ஆகஸ்ட் 29இல் வெளியிட்ட இந்த ட்வீட்டில், பெருங்குடல் புற்றுநோயுடனான அவரது போராட்டத்துக்கு பிறகு அவர் இறந்த செய்தியைப் பகிர்ந்துகொண்டனர். இந்த ட்வீட் 7.5 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளையும் 3.1 மில்லியன் ரீட்வீட்களையும் பெற்றது.
அமெரிக்க துணைத் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸின் ட்வீட். ஜோ பிடனின் ஜனாதிபதி வெற்றிக்கு வாழ்த்து சொல்லும் இந்த ட்வீட். இந்த ஆண்டு உலகில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட பெண் கமலா ஹாரிஸ்தான்.
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா என்பிஏ நட்சத்திரம் கோபி பிரையன்ட்டின் மரணம் குறித்து ட்வீட் செய்ததில் இந்த ஆண்டின் இரண்டாவது மிகவும் விரும்பப்பட்ட ட்வீட், 3.9 மில்லியன் லைக்குகளுடன். லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகரில் ஹெலிகாப்டர் விபத்தில் கோபி பிரையன்ட், அவரது 13 வயது மகள் கியானா மற்றும் ஏழு பேர் இறந்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் நடிகர் அனுஷ்கா ஷர்மாவின் கர்ப்ப அறிவிப்பு இந்தியாவில் அதிகம் விரும்பப்பட்ட ட்வீட் ஆகும், இது 6,45,000 க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றது.
மே மாதத்தில் அமெரிக்க இசைக்கலைஞர் லாவ் எழுதிய 'நெவர் நாட்' பாடலை உள்ளடக்கிய தென் கொரிய பாய்பேண்ட் பி.டி.எஸ்ஸின் உறுப்பினரான ஜுங்கூக்கின் பாடல், இந்த ஆண்டு உலகளவில் இரண்டாவது மறு ட்வீட் செய்யப்பட்ட ட்வீட் ஆகும்.
கோவிட் -19 தொற்றுநோய்களின் போது நம்பிக்கையை உருவாக்க விளக்குகள் ஏற்றுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் ட்வீட் ட்விட்டரில் இந்தியாவில் "அரசியலில் மிகவும் மறு ட்வீட் செய்யப்பட்ட ட்வீட்" ஆகும்.
7. ஆண்டி மிலோனகிஸின் ட்வீட்
அமெரிக்க நகைச்சுவை நடிகரான ஆண்டி மிலோனகிஸின் நாசா விண்வெளி ஸ்பேஸ்எக்ஸ் ஏவுதல் மற்றும் ஜார்ஜ் ஃபிலாய்ட் கொலை தொடர்பாக வெளியிட்ட ட்வீட்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதை பரிசோதித்ததாக பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் அறிவித்தது இந்தியாவில் இந்த ஆண்டின் மிகவும் மேற்கோள் காட்டப்பட்ட ட்வீட் ஆகும்.
9. பிரதமர் மோடிக்கு எம்.எஸ் தோனி நன்றி தெரிவித்த ட்வீட்
தோனி இந்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததையடுத்து,பிரதமர் நரேந்திர மோடி தோனிக்கு எழுதிய கடிதத்திற்கு பாராட்டு தெரிவிக்கும் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ட்வீட் இந்தியாவில் விளையாட்டு பிரிவில் மிகவும் மறு ட்வீட் செய்யப்பட்டது.
ஒரு எளிய தலைப்பைக் கொண்ட இந்த வீடியோ - "தனிமைப்படுத்தப்பட்ட நாள் 6" - கொரோனா வைரஸால் ஏற்பட்ட பொதுமுடக்கம் மற்றும் தனிமைப்படுத்தலின் போது, ஒரு சாக் கைப்பாவை மூலம், கார்களை விழுங்கும் ஒரு பயனரின் படைப்பு முயற்சியைக் காட்டுகிறது.