இந்தியா

அயோத்தி தாக்குதல் வழக்கு - பயங்கரவாதிகள் 4 பேருக்கு ஆயுள்

rajakannan

அயோத்தியில் கடந்த 2005ம் ஆண்டு நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் வழக்கில் 4 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடத்தை குறிவைத்து, கடந்த 2005ம் ஆண்டு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் 2 பேர் உயிரிழந்ததோடு, சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்‌ 7 பேர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிராக பிராயக்ராஜ் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. 

14 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் நான்கு பேரை குற்றவாளியாக அறிவித்து அவர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மற்றொருவர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். சிறப்பு நீதிபதி தினேஷ் சந்திரா இந்தத் தீர்ப்பை வழங்கினார்.  நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருந்தது விசாரணையில் தெரியவந்தது.