இந்தியா

நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி

நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி

jagadeesh

நாடாளுமன்றத்தின் மீதான பயங்கரவாத தாக்குதல் தினத்தையொட்டி, தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். 

வீரமரணம் அடைந்தவர்களின் புகைப்படங்கள் நாடாளுமன்ற வளாகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பலரும் மறைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர். 

2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்துக்குள் புகுந்த லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் டெல்லி காவல்துறையினர் 5 பேர், மத்திய ரிசர்வ் காவல்படை பெண் காவலர், ஊழியர்கள் இருவர் மற்றும் தோட்டக்காரர் ஒருவர் என 9 பேர் உயிரிழந்தனர்.