ஜம்மு காஷ்மரில் 200 முதல் 300 பயங்கரவாதிகள் வரை பதுங்கி இருப்பதாகவும், பாகிஸ்தானும், எல்லை தாண்டி பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பி வைக்க முயன்று வருகிறது எனவும், அம்மாநில டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நாள் முதலாக, அம்மாநிலத்தில் பெரிய அளவில் தாக்குதலை நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முயன்று வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் மட்டும் 200 முதல் 300 பயங்கரவாதிகள் வரை பதுங்கி இருப்பதாக அம்மாநில டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்ற நோக்கில், எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்திவருவதாகத் தெரிவித்தார். பாதுகாப்புப் படையினரின் தீவிர நடவடிக்கையால், தற்போது ஜம்மு, லே மற்றும் கார்கில் பகுதியில் நிலைமை சீரடைந்து இருப்பதாகவும் அவர் கூறினார்.