இந்தியா

காஷ்மீரில் பாக். ஆதரவாளர்கள் வன்முறை: வாலிபர் பலி

webteam

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாகிஸ்தான் ஆதரவாளர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே மோதல் மூண்டது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

ஈகைத்திருநாள் என அழைக்கப்படும் ரம்ஜான் பண்டிகை நாட்டின் பல பகுதிகளில் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. காஷ்மீரிலும் ரம்ஜான் தொழுகை பிரமாண்டமாக நடைபெற்றது. ஸ்ரீநகரில் தொழுகைக்குப் பின், பாகிஸ்தான் ஆதரவாளர்கள் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். இளைஞர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு பதற்றம் நிலவியது. 

வன்முறையில் ஈடுபட்டவர்கள் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் கொடியையும் பாகிஸ்தான் கொடியையும் காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. வன்முறையாளர்கள் மீது பாதுகாப்புப்படையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். ஆனந்த்நாக் பகுதியில் நடந்த கல்லெறி சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். சுமார் 10 பேர் காயமடைந்துள்ளனர். வன்முறைச் சம்பவங்களை அடுத்து எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.