இந்தியா

தமிழில் கல்வி பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் 20% ஒதுக்கீடு:நீதிமன்றத்தின் தீர்ப்பு

தமிழில் கல்வி பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் 20% ஒதுக்கீடு:நீதிமன்றத்தின் தீர்ப்பு

கலிலுல்லா

தமிழ் வழியில் முழுமையாக கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20% ஒதுக்கீடு என்பதை எதிர்த்த வழக்கின் விசாரணை விரிவாக நடத்தப்படுமென உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழ் வழிக்கல்வியில் பயின்றவர்களுக்கு அரசு பணிகளில் 20% இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை தமிழக அரசு கடந்த ஆண்டு வெளியிட்டது. மேலும் அதில் சம்மந்தப்பட்ட வேலைக்கான கல்வி தகுதியை மட்டும் தமிழ் வழியில் பயின்றால் போதும் என்று கூறப்பட்டிருந்தது.இந்த ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆரம்பம் முதல் தமிழ் வழிக் கல்வியில் முழுமையாக பயின்றவர்களுக்கு மட்டுமே இந்த 20% ஒதுக்கீடு பொருந்தும் என அரசாணைக்கு விளக்கம் கொடுத்து வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் ஸ்ரீராம் என்பவர் தான் டி.என்.பி.எஸ்சி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பித்த பின்னர் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அதன் பிறகு தான் அரசாணையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. எனவே அந்த திருத்தப்பட்ட அரசாணை தனக்கு பொருந்தாது, மேலும். தான் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியிலும் படித்துள்ளேன், எனவே தன்னை டி.என்.பி.எஸ்சி குரூப்-1 தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, யாருக்கு 20% ஒதுக்கீடு என்பது குறித்து தெளிவுபடுத்தியுள்ளது, அதன்படி திருத்தப்பட்ட அரசாணையும் வெளியிடப்பட்டது.எனவே மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

அப்போது பேசிய நீதிபதிகள், தமிழ் மிகப்பழமையான மொழி என்பதை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். தமிழ் மொழிக்கு என்று மிக்கப்பெரிய வரலாறு உள்ளது. இந்த வழக்கை முழுமையாக விசாரிக்க விரும்புகிறோம். இந்த வழக்கில் இடைகால உத்தரவு மட்டுமே நாங்கள் தற்போதையக்கு பிறப்பிக்கிறோம்.ஏனெனில் நாளை டி.என்.பி.எஸ்சி தேர்வு நடைபெறவுள்ளதால், மனுதாரர் ஸ்ரீராமை டி.என்.பி.எஸ்சி குரூப்-1 தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்க உத்தரவிடுகிறோம்.

ஆனால் இந்த உத்தரவு வழக்கு மீதான இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது.அதுவரை மனுதாரரின் தேர்வு முடிவை வெளியிடப்படக்கூடாது என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்