இந்தியா

எல்லைபகுதியில் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - வீரர்களின் தேடுதல் வேட்டை தீவிரம்

எல்லைபகுதியில் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - வீரர்களின் தேடுதல் வேட்டை தீவிரம்

webteam

காஷ்மீர் மாநிலம் நவ்காம் பகுதியில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்‍கொன்றனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய நிலைகளை குறிவைத்து தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்துவதும், ஊடுருவ முயல்வதும் நடைபெற்று வருகிறது. இதனை நமது வீரர்கள் தொடர்ந்து முறியடித்து வருகின்றனர். இந்நிலையில், ராணுவ வீரர்கள் மேற்கொண்ட சோதனையின்போது, காஷ்மீர் மாநிலம் நவ்காம் பகுதியில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்‍கொன்றனர். மேலும், தீவிரவாதிகள் அப்பகுதியில் ஊடுருவி இருக்‍கிறார்களா என ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் சற்றும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.