இந்தியா

Go First நிறுவனத்தின் இரண்டு விமானங்கள் அவசரமாக தரை இறக்கம்

JustinDurai

ஒரே நாளில் கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் இரு விமானங்கள் இயந்திரக்கோளாறு காரணமாக நடுவானில் இருந்து தரையிறக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மும்பையில் இருந்து லே நோக்கி சென்ற கோ ஃபர்ஸ்ட் விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக, அந்த விமானம் டெல்லிக்கு திசை திருப்பி விடப்பட்டது. அதேபோல் ஸ்ரீநகரில் இருந்து டெல்லி நோக்கி சென்ற கோ ஃபர்ஸ்ட் விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக அந்த விமானம் மீண்டும்  ஸ்ரீநகருக்கு திசை திருப்பி விடப்பட்டது. இந்த இரு விமானங்களில் பயணித்த பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரே நாளில் கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் இரு விமானங்கள் இயந்திரக்கோளாறு காரணமாக நடுவானில் இருந்து தரையிறக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று நடந்த இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) அனுமதி அளித்தால் மட்டுமே பழுதடைந்த விமானங்கள் பறக்க அனுமதிக்கப்படும் என்றும் சிவில் ஏவியேஷன் ரெகுலேட்டர் தெரிவித்துள்ளது.

அண்மைக் காலங்களாக பயணிகள் விமானங்களில் அடிக்கடி பழுது ஏற்படுவது வாடிக்கையாகியுள்ளது. இதனால், அவசர தரை இறக்க நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாம்: இளங்கலை நீட் 2022-ல் வட இந்தியர்கள் ஆள்மாறாட்டம்: சிபிஐ விசாரணையில் அதிர்ச்சி தகவல்