இந்தியா

"குழந்தையின் மீது சத்தியம் செய்யட்டும்" -பாலியல் வழக்கில் கைதான காங்கிரஸ் எம்.எல்.ஏ.

Abinaya

மத்தியப் பிரதேசத்தில் ரயிலில் பயணம்செய்த, 32 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் தாமோக் மாவட்டம், தாமோக் ரயில் நிலையத்திற்கு ரிவான்ஞ்சல் எக்ஸ்பிரஸில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுனில் ஷரப், சித்தார்த் குஷ்வாகா என்ற இரண்டு எம்.எல்.க்களும் முன்பதிவு செய்யாத ஏசி வகுப்பில் ஏறியுள்ளனர் பயணம் செய்ததாகவும் மற்றும் அவர்கள் இருவரும் போதையிலிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு குழந்தையுடன் தனியாகப் பயணம் செய்துகொண்டிருந்த பெண்ணிடம், இரு எம்.எல்.ஏக்களும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண், தனது கணவருக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். உடனே அந்த பெண்ணின் கணவர் ஜபல்பூர் ரயில் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்ததோடு, ரயில்வே அமைச்சகத்துக்கும் டிவிட்டர் மூலம் தகவல் கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அடுத்த ரயில் நிலையம் வரும் போது காவல்துறையினர் ரயிலில் ஏறி விசாரணை செய்து, இரு எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து குஷ்வாஹா, ஷரஃப்பும் ,’ அப்பெண் கூறியது போன்ற சம்பவங்கள் எதுவும் ரயிலில் நடக்கவில்லை. அந்த பெண்ணுக்கு எங்களது சீட்டை தான் கொடுத்தோம். அப்பெண்ணின் முகத்தைக் கூட பார்க்கவில்லை. அப்பெண்ணைத் தொட்டோம் என்பது எல்லாம் ஆதாரமற்ற அபத்தமான குற்றச்சாட்டு. நாங்கள் இவ்வாறு செய்யும் ஆட்களா? அந்த பெண்ணிடம் சீட் நம்பர் கேட்க மட்டும் தான் பேசினோம். வேறு எதுவும் பேசவில்லை. அந்த தங்கை, சொல்வது உண்மை எனில் அவளது குழந்தை மீது சத்தியம் செய்யச் சொல்லுங்கள் ‘’ என்று தெரிவித்துள்ளனர்.