2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் தேவையில்லை என்று பாரதிய ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.
அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெரிய பணப்பரிவர்த்தனைகள் இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் போது ஊழல் வேரறுக்கப்படும். ஆகையால் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளே போதும். இவைகளை கொண்டே இணையவழி பணப் பறிமாற்றம் செய்ய இயலும். 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களால்தான் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் செயல் அதிகரித்துள்ளது. அனைத்து பணப்பரிவர்த்தைகளையும், இணையவழியாக மேற்கொள்ளும் வழக்கத்தை அதிகரிப்பதன் மூலமாக மட்டுமே, ஊழலில்லாத நிர்வாக அமைப்பை உருவாக்க முடியும்’ எனத் தெரிவித்தார்.