UP Police's encounter
UP Police's encounter  File Image
இந்தியா

‘6 ஆண்டுகளில் 183 குற்றவாளிகள் சுட்டுக்கொலை’ - உ.பி. என்கவுண்டர் தரவுகளின் பகீர் பின்னணி!

PT WEB

உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சில நாட்களுக்கு முன் முன்னாள் எம்.எல்.ஏ அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது சுட்டுக் கொல்லப்பட்டனர். வழக்கறிஞர் உமேஷ் பால்கொலை வழக்கில் காவலில் இருந்த இவர்கள், பிரயாக்ராஜ் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்ட போது இச்சம்பவம் நடந்தது.

அங்கு ஊடகவியாளர்கள் போல் வந்த மூவர், ‘ஜெய் ஸ்ரீராம்’ எனக்கூறிக்கொண்டு இருவரையும் சுட்டுக்கொன்றது விவாதப்பொருளாக மாறியது. பின் சுட்டுக்கொன்ற மூவரும் காவலர்களிடம் சரணடைந்தனர். ஆனால் இக்கொலைகளுக்குப் பின்னால் உ.பி. காவல்துறை உள்ளதாக சில எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை  முன்வைத்தது. இதைத்தொடர்ந்து இந்தச் சம்பவம் பெரும் அரசியல் விவாதமாக மாறியது

UP Police's encounter

இதைத்தொடர்ந்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘இதுபோன்ற வன்முறைக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்றார். உ.பி காவல்துறை தரவுகளின்படி கடந்த 6 ஆண்டுகால ஆட்சியில் 183 குற்றவாளிகள் என்கவுன்டர்களில் கொல்லப்பட்டிருப்பதாக தெரிகிறது.

சமீபத்தில் அம்மாநில உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் பேசிய யோகி ஆதித்யநாத், "உத்தரப் பிரதேசத்தில் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்த மாஃபியாக்களை பாஜக அரசு கட்டுப்படுத்தியுள்ளது. இதுதான் எங்களின் 6 ஆண்டு சாதனை" என்று கூறியிருந்தார்.

உ.பி காவல்துறையின் பகீர் தகவல்கள்!

உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் மார்ச் 2017ஆம் ஆண்டில் பதவியேற்றார். அப்போது முதல் மாநிலத்தில்

* 10,900-க்கும் மேற்பட்ட என்கவுன்டர்கள் நடந்துள்ளது

* 23,300 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்

* 5,046 பேர் காயமடைந்தனர்.

* இதில் காயமடைந்த காவலர்கள் எண்ணிக்கை 1,443; 13 பேர் உயிரிழந்தனர்

என உ.பி காவல்துறை தரவு தெரிவிக்கின்றன

Gun

20 மார்ச் 2017 முதல் மாநிலத்தில் 183 குற்றவாளிகள் என்கவுன்டர்களில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்  என்று காவல்துறை சிறப்பு இயக்குநர் ஜெனரல் சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். அதே வேளையில் இந்த என்கவுண்டர்களில் பல ‘போலி’ என்று எதிர்க்கட்சிகள், பொதுநல அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. உ.பி அரசும் காவல்துறையும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், 2017ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சட்டம் ஒழுங்கு மேம்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

இதன் பின்னணி என்ன?

UP Police's encounter
இந்நேரத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் உத்தரப்பிரதேச காவல்துறையால் என்கவுண்டர் செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகள் மற்றும் அவர்களின் பின்னணிகளை இங்கே பார்போம்:

கொல்லப்பட்டவர்களில் விகாஸ் துபே, ஆசாத் அகமது போன்ற பெரும் குற்றவாளிகள் என்கவுன்டர் உள்ளது

தேசிய தலைப்புச் செய்திகளாக மாறிய ஐந்து முக்கிய உத்தரப் பிரதேச காவல்துறையின் என்கவுன்டர்களின் பட்டியலை எடுத்துக்கொண்டால், அனில் துஜானா என்ற பிரபல கேங்ஸ்டர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தெரிகிறது. மீரட் நகரில் உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படை இந்த என்கவுன்ட்டரை நிகழ்த்தியது. கொலை, கொள்ளை, பணம் பறிப்பு உள்பட அனில் துஜானா மீது 62 வழக்குகள் உள்ளன. அனில் துஜானா 2023 மே 4 காவல்துறையால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

அனில் துஜானாவின் பின்னணி: உ.பி.யின் பிரபல கேங்ஸ்டர் நரேஷ் கூட்டணியில் அனில் துஜானா இருந்த நிலையில், நரேஷ் தன் எதிர் கும்பலால் கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்கும் நோக்கில் குற்றங்களை செய்ய தொடங்கிய அனில், பிற்காலத்தில் ரவுடியாக மாறினார். உ.பி. காவல்துறைக்கு பெரும் சவாலாக இருந்துவந்தவர் இவர்.

விகாஸ் துபே: 10 ஜூலை 2020 அன்று, கான்பூரில் காவல்துறையுடன் நடந்த மோதலில் கேங்க்ஸ்டர் விகாஸ் துபே கொல்லப்பட்டார். உஜ்ஜயினியில் இருந்து கான்பூருக்கு துபேயை ஏற்றிச் சென்ற காவல்துறை வாகனம் கவிழ்ந்ததாகவும், அதன்பின் குற்றவாளி துபே தப்பிச் செல்ல முயன்றதாகவும், அந்த மோதலில்தான் துபே சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. கான்பூரில் காவல் நிலையத்தில் இவர் மீது சுமார் 60 வழக்குகள் உள்ளன. கொலை, கொள்ளை முயற்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய குற்றங்களில் விகாஸ் துபே தொடர்புடையவராக இருந்தார்.

UP Police's encounter

இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்தாலும் விகாஸ் துபே தண்டிக்கப்படவில்லை. காரணம் விகாஸ் துபேக்கு அரசியல் பின்புலம் இருந்தது. இந்நிலையில் 2020 ஜூலை 3-ம் தேதி, விகாஸ்-ஐ கைது செய்ய முயன்ற போது, அவர் தரப்பினர் காவல்துறையின் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் எட்டு காவல்துறையினர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கில் விகாஸ் தேடப்பட்டு வந்த நிலையில் ஜூலை 9ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இப்படிப்பட்ட விகாஸ் துபேயை கான்பூருக்கு சாலை மார்க்கமாக அழைத்துச் சென்ற போது வாகனம் கவிழ்து விபத்துக்குள்ளானதாகவும், அப்போது தப்பி ஓட முயன்ற விகாஸ் துபே மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாகவும் அதில் அவர் பலியானதாகவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

gun

மோதி சிங்: 2021 பிப்ரவரி 9 அன்று, உத்தரபிரதேசத்தில் உள்ள நாக்லா தீமர் கிராமத்திற்கு மதுபான மாஃபியா கும்பலை பிடிக்க சென்ற காவல்துறை மீது மோதி மற்றும் அவரது கூட்டாளிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், கான்ஸ்டபிள் ஒருவரை இவர் கொன்றுவிட்டு, சப்-இன்ஸ்பெக்டரை காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பின் பிப்ரவரி 21, 2021 அன்று காவல்துறை என்கவுன்டரில் கொல்லப்பட்டார் மோதி. இவர் வரலாற்று ஆசிரியராக இருந்தவர். இவர் மீது கிட்டத்தட்ட 11 கிரிமினல் புகார்கள் இருந்தன.

வினோத் குமார்: கொலை மற்றும் கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் கொள்ளை உள்ளிட்ட 25 வழக்குகளில் குறிப்பிடப்பட்டுள்ள வினோத் குமார், செப்டம்பர் 30, 2022 அன்று காவல்துறையினரின் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.

டிங்கு கபாலா: உத்தரப்பிரதேச சிறப்பு அதிரடிப் படையினரால் பாரபங்கி கபாடாவில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட டிங்கு கபாலா, கொள்ளை - கொலை - கொலை முயற்சி மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றங்கள் என 12க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்தார்.

gun attack

இதுபோன்று தொடர்ந்து பல்வேறு குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். பல வழக்குகளில் மாநில அரசை எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், ஆறு ஆண்டுகால ஆட்சியில் மாஃபியாக்களை ஒழித்துள்ளது தான் பாஜகவின் மிகப்பெரிய சாதனையாக இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

- ராஜீவ்