இந்தியா

ஒவ்வொரு மாநிலமாகக் கடத்தி... 18 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

ஒவ்வொரு மாநிலமாகக் கடத்தி... 18 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

webteam

18 வயது பெண்ணைக் கடத்தி ஒவ்வொரு மாநிலமாக அழைத்துச் சென்று அறையில் பூட்டி வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஒடியா கெராவைச் சேர்ந்தவர் உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 18. இவர் கடந்த டிசம்பர் மாதம், தன் அப்பா வாங் கியிருந்த கடன் தொகையைத் திருப்பிக் கொடுக்கச் சென்றார். அப்போது தனியாக நடந்து சென்று கொண்டிருந்த உமாவை, அந்தப் பகுதியைச் சேர்ந்த முகேஷ், சிவா, தர்பார் ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டினர். ‘எங்களுடன் வந்துவிடு, இல்லையென்றால் குத்திக் கொன்றுவிடுவோம்’ என்றதும் பயத்தில் அவர்களுடன் சென்றார் உமா.

அவர்கள், அந்தப் பெண்ணை குஜராத்துக்கு கடத்திச் சென்றனர். அங்கு ஒரு கிராமத்தில் ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர். தினமும் உமாவைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் உமாவை ராஜஸ்தானுக்கு கடத்தினர். அங்கும் ஒரு அறையில் பூட்டி வைத்து பாலியல் வன்கொடுமை செய்தனர். பிறகு அங்கிருந்து ஹரியானாவுக்கு. அங்குள்ள வஸாரியாபாத் பகுதியில் ஒரு அறையில் அடைத்து வைத்து இதே போல செய்துள்ளனர். 

இப்படி கடந்த ஏழு மாதமாக கொடுமை செய்த அவர்கள், கடந்த சில நாட்களுக்கு முன் போதையில் இருந்துள்ளனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட, உமா அங்கிருந்து தப்பினார். அப்போது தற்செயலாக அந்தப் பகுதியில் தன் அம்மா செல்வதை உமா பார்த்தார். தனக்கு நடந்ததை அவரிடம் சொல்லி கண்ணீர் விட்டு அழுதார்.

இதையடுத்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் முகேஷ், சிவா, தர்பார் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.