இந்தியா

பாலியல் தொல்லையால் காப்பகத்தில் காணாமல்போன சிறுமிகள் மீட்பு

பாலியல் தொல்லையால் காப்பகத்தில் காணாமல்போன சிறுமிகள் மீட்பு

webteam

உத்தரப் பிரதேசத்தின் தியோரியா காப்பகத்தில் இருந்து காணாமல் போன சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

பீகாரைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்திலும் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை இழைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. காப்பகத்தில் தங்கியிருந்த 10 வயதுச் சிறுமி அங்கிருந்து தப்பிச் சென்று, மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் 24 பேர் மீட்கப்பட்டனர். மேலும் 18 சிறுமிகளை காணவில்லை. இதையடுத்து காப்பகத்துக்கு சீல் வைத்தனர். இந்நிலையில் காணாமல் போன 18 பேரை காவல்துறையினர் மீட்டுள்ளனர். 

தியோரியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவர்களில் 15 பேர் 10 வயதுக்கும் குறைவானவர்களாக இருந்தனர். சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்ட காப்பகம் தொடர்பான வழக்குகளை அலாகாபாத் உயர்நீதிமன்றம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. சட்டவிரோதமாக செயல்படும் காப்பகங்களை மூட சிபிஐ உத்தரவிட்ட பின்னும் நடவடிக்கை எடுக்காத உத்தரப்பிரதேச அரசை அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.