உபி  fb
இந்தியா

உபி| 17 குழந்தைகளுக்கு ‘ சிந்தூர்’ என்ற பெயர்!

ஆபரேஷன் சிந்தூரை நினைவு கூறும்வகையில், உபியில் பிறந்த குழந்தைகளுக்கு ‘ சிந்தூர் ‘ என்று பெயர் வைத்துள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக பாகிஸ்தான்மீது இந்தியா ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற இராணுவ நடவடிக்கையை எடுத்தது. இந்நிலையில், சிந்தூர் என்ற பெயரை உபியில் புதிதாக பிறந்த 17 குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய சம்பவம் நடந்திருக்கிறது.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, கடந்த 7ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா கடும் தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு நாட்டின் எல்லையோர மாநிலங்களான காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தானை பாகிஸ்தான் குறிவைத்தாலும், பெரும்பாலான முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. இதில் பயங்கரவாதிகள், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் என 140 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தநிலையில், இந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில், உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் பிறந்த தங்களின் குழந்தைகளுக்கு ‘ சிந்தூர் ‘ என சிலர் பெயர் வைத்துள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

உபியில் குஷிநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 10, 11,ஆகிய தேதிகளில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு அவர்களது குடும்பத்தினர் ‘சிந்தூர்; என்ற பெயரை வைத்துள்ளனர் என்ற மருத்துவமனையில் முதல்வர் ஆர்.கே.ஷாஹி தெரிவித்துள்ளார். இந்தசம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.