Raja ravi varma's Yashoda Krishna X
இந்தியா

ராஜா ரவி வர்மாவின் ஓவியம்... ரூ.167 கோடிக்கு ஏலம்.. வாங்கியது யார்?

சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சைரஸ் எஸ் பூனாவாலா, ராஜா ரவி வர்மாவின் புகழ்பெற்ற 'யசோதா மற்றும் கிருஷ்ணா' ஓவியத்தை வாங்கியுள்ளார்

PT WEB

மும்பையில் நடைபெற்ற Saffronart Spring Live ஏலத்தில் ராஜா ரவி வர்மாவின் புகழ்பெற்ற ‘யசோதா மற்றும் கிருஷ்ணா’ ஓவியம் ரூ.167.20 கோடி என்ற சாதனை விலைக்கு விற்கப்பட்டது.

மும்பையில் நடைபெற்ற Saffronart's Spring Live Auction ஏலத்தில், ராஜா ரவி வர்மாவின் புகழ்பெற்ற 'யசோதா மற்றும் கிருஷ்ணா' ஓவியம் ரூ.167.20 கோடி சாதனை விலைக்கு விற்கப்பட்டது. தொழிலதிபர் டாக்டர் சைரஸ் எஸ். பூனாவாலா அந்த ஓவியத்தை வாங்கியதன் மூலம், நவீன இந்தியக் கலைப்படைப்பு ஒன்று ஏலத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச விலைக்கு வாங்கப்பட்டதற்கான புதிய சாதனையை படைத்துள்ளார்.

Cyrus S. Poonawalla

இந்த விற்பனை குறித்த விவரங்களை பிடிஐ செய்தி நிறுவனம் பகிர்ந்துள்ளது. மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில், கடும் போட்டிக்குப் பிறகு அந்த ஓவியம் ரூ.167.20 கோடிக்கு (சுமார் 18 மில்லியன் அமெரிக்க டாலர்) விற்கப்பட்டது. இந்த விற்பனை, கடந்த ஆண்டு எம்.எஃப். ஹுசைனின் 'பெயரிடப்படாதது (கிராம யாத்ரா)' ஓவியம் பெற்ற ரூ.118 கோடிக்கும் அதிகமான முந்தைய ஏல சாதனையை முறியடித்து, ஒரு புதிய மைல்கல்லைப் பதித்துள்ளது என்று கூறியுள்ளது