கேரளாவில் ஒகி புயல் காரணமாக கடலில் காணாமல் போன 150 மீனவர்களை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், கொச்சி உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற சுமார் 150 மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்காக விமானப்படையின் ஏஎன் 32 ரக விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது அரபிக்கடலில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணியை தொடரமுடியவில்லை.