ஆந்திர மாநிலத்தில் பேருந்து மீது ஜீப் மோதிய விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 15 பேர் உயிரிழந்தனர்.
தெலங்கானா மாநிலத்தின் கட்வால் மாவட்டத்தில் உள்ள வட்டேபள்ளி பிளாக்கின் ராமாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கர்னூர் மாவட்டத்திற்கு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர். திருமணம் முடிந்து அவர்கள் 20 பேர் ஜீப் ஒன்றில் தங்களது கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனம் ஒன்றில் மோதாமல் இருப்பதற்காக வேனின் டிரைவர் முயற்சித்துள்ளார். அப்போது, வாகனம் அவரது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பேருந்து மீது மோதியது.
இந்த கொடூர விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 15 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கர்னூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவரும் இந்த சம்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.