இந்தியா

ஊரடங்கை மீறினால் '14 நாட்கள் தனிமை முகாம்' - மத்திய அரசு எச்சரிக்கை !

jagadeesh

ஊரடங்கை மீறினால் 14 நாட்கள் தனிமை முகாமில் இருக்க நேரிடும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்த மக்கள், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது இடங்களில் நடமாட்டம் அதிகரித்தது. குறிப்பாக, அசைவ உணவுப்பொள்கள் வாங்க பல இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் மத்திய அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மக்கள் முழுமையாக பின்பற்றுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், பிற மாநில தொழிலாளர்கள், மாணவர்களை விடுதியிலிருந்து வெளியேற்றுவோர் மீதும் நடவடிக்கை தேவை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 979ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 87 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் கூறியுள்ளது.