இந்தியா

இந்தாண்டு மட்டும் ஜம்மு காஷ்மீரில் 138 பயங்கரவாதிகள் கொலை

கலிலுல்லா

இந்தாண்டு ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 138 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) கூடுதலாக 5500 துருப்புக்களை ஜம்மு காஷ்மீருக்கு அனுப்ப உள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின் படி, இந்தாண்டு மட்டும் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 138 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பொதுமக்களின் படுகொலைகளைத் தொடர்ந்து 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

''ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பொதுமக்கள் படுகொலைகளைக் கருத்தில் கொண்டு, அங்கு கூடுதலாக ஐந்து சிஆர்பிஎஃப் குழுக்கள் அனுப்பப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் ஒரு வாரத்தில் அங்கு பணியமர்த்தப்படும். ஏற்கெனவே அங்கு 25கம்பெனிகளைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் பணியிலிருப்பது குறிப்பிடத்தக்கது.