இந்தியா

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சிறுவன் கைது

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சிறுவன் கைது

webteam

உத்தரப் பிரதேசத்தில் 13 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கான்பூர் தேஹத் மாவட்டத்தில் உள்ள ஷிவ்லி நகரில், 13 வயதுச் சிறுமியை 16 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தன்னுடைய சகோதரியை அருகில் வைத்து கொண்டே இந்தக் கொடூர செயலை அந்தச் சிறுவன் நிகழ்த்தியுள்ளார். பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமல்லாமல், சிறுமியை தாய், தந்தையுடன் சேர்ந்து சிறுவனும் கடுமையாக தாக்கியுள்ளனர். தற்போது அந்தச் சிறுமி ஆபத்தான நிலையில் கான்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவனை பிடித்துள்ள போலீசார், அவரது பெற்றோரை கைது செய்துள்ளனர்.