மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா பகுதியில் இருந்து எலிபெண்டா குகைக்கு சென்ற படகு தண்ணீரில் மூழ்கி உள்ளது. அந்த பகுதியில் அதிவேகமாக சீறிப்பாய்ந்து வந்த கடற்படை படகு, பயணிகள் படகின்மீது பயங்கரமாக மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விபத்திற்கு உள்ளான படகில் நூற்றுக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர். அருகில் உள்ள படகுகளில் உள்ளவர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதேபோல், விரைந்து வந்த கடலோர காவல் படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 13 பேர் பலியாகினர்.
இதுகுறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர், “இந்திய கடற்படை பட்கு ஒன்று மும்பை துறைமுகத்தில் இன் ஜின் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக படகு கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. இதனால், அந்த படகு பயணிகளை ஏற்றிச் சென்ற படகில் மோதியது. இதில் பயணிகள் படகு கடலில் கவிழ்ந்தது” என்று தமது பதிவில் தெரிவித்துள்ளார்.