இந்தியா

‘உங்களது கனவை பூர்த்தி செய்ய முடியவில்லை’: மாணவரின் தற்கொலை கடிதம்

‘உங்களது கனவை பூர்த்தி செய்ய முடியவில்லை’: மாணவரின் தற்கொலை கடிதம்

Rasus

பொதுத்தேர்வில் மூன்று கேள்விக்கு விடையளிக்க முடியாததால் 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் மொகாலியை சேர்ந்தவர் கரண்வீர் சிங். 12-ஆம் வகுப்பு மாணவரான இவர் சமீபத்தில் பொதுத்தேர்வு எழுதியிருக்கிறார். இயற்பியல் தேர்வில் அவரால் மூன்று மதிப்பெண் கேள்வி மூன்றிற்கு விடையளிக்க முடியவில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தியில் அவர் பெற்றோருக்கு உருக்கமான தற்கொலைக் கடிதத்தை எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை கடிதத்தில் கரண்வீர் சிங், “  என்னை மன்னித்துவிடுங்கள். உங்களது எதிர்பார்ப்புக்கு ஏற்ப என்னால் வாழமுடியவில்லை. உங்களின் கனவையும் என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை. நான் தாத்தா, பாட்டியை மிக அதிகமாக நேசிக்கிறேன். அவர்களை நல்லபடியாக பார்த்துக்கொள்ளுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத்தேர்வுக்கு முந்தைய தேர்வுகளில் 90 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருந்த கரண்வீர் சிங், பொதுத்தேர்வில் இன்னும் சிறப்பாக செயல்படுவேன் என பெற்றோரிடம் முன்னதாக வாக்குறுதி அளித்திருந்தாராம். இந்நிலையில் தேர்வில் மிகச் சிறப்பாக செயல்பட முடியவில்லை என எண்ணி தனது உயிரை முடித்துள்ளார்.