இந்தியா

“கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு எந்த பக்கவிளைவுகளும் இல்லை” - 120 வயது மூதாட்டி

“கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு எந்த பக்கவிளைவுகளும் இல்லை” - 120 வயது மூதாட்டி

EllusamyKarthik

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு எந்த பக்கவிளைவுகளையும் நான் எதிர்கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார் காஷ்மீரை சேர்ந்த 120 வயது பாட்டி ஒருவர்.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 19,50,04,184 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் 4,30,58,913 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் உதம்பூர் மாநிலத்தில் உள்ள கட்டியாஸ் (KATIYAS) கிராமத்தை சேர்ந்த 120 வயதான தோலி தேவி என்பவர் தற்போது தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். 

“கொரோனாவை வெல்ல தடுப்பூசி தான் ஒரே தீர்வு. அதனால் தான் தடுப்பூசி நான் செலுத்திக் கொண்டேன். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். அது பாதுகாப்பானதும் கூட. நானே தடுப்பூசி போட்டுக் கொள்ளும்போது உங்களுக்கு என்ன? தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு எந்த பக்கவிளைவுகளையும் நான் எதிர்கொள்ளவில்லை” எனத் தெரிவித்துள்ளார் அவர். 

பாட்டி தோலி தேவியை தயக்கம் இன்றி தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்காக பலரும் பாராட்டி வருகின்றனர்.