லஞ்ச ஊழல் மற்றும் ஒழுங்கீன புகார் காரணமாக வருமான வரித் துறை உயர் அதிகாரிகள் 12 பேரை மத்திய அரசு அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது.
இந்திய வருவாய்த் துறையில் ஆணையர் நிலையில் உள்ள அதிகாரி ஒருவர், இரு பெண் அதிகாரிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின்பேரில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தன் பெயரிலும் குடும்பத்தினர் பெயரிலும் 3 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாங்கிய வருவாய்த்துறை உயர் அதிகாரி ஒருவரும் பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளாகிள்ளார்.
இணை ஆணையர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி பெரிய அளவில் ஊழலில் ஈடுபட்டதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது போன்று பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மொத்தம் 12 அதிகாரிகளை பணிநீக்கம் செய்து மத்திய அரசு அதிரடி காட்டியுள்ளது.